An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

சிகரம் தொடு விமர்சனம்

 

 
Quick Stats
 

Genre:
 
Director:
 
Actor:
 
Release Date: 12 September 2014
 
Producer: Ronnie Screwvala
 
Composer: D. Iman
 
Plot
69%


 
Acting
72%


 
Directing
70%


 
Cinematography
72%


 
Costume
65%


 
Score
71%


 
Total Score
70%
70/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

இந்தியாவில் பரவலாக நடைபெற்று வரும் ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தை கருவாக கொண்டு வந்திருக்கும் படம் சிகரம் தொடு. ஆனால் அதில் அப்பா செண்டிமெண்ட்,காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் கௌரவ். போலீஸ் அதிகாரியான சத்யராஜ், வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில் துளியும் […]

Posted September 13, 2014 by

 
Full Article
 
 

sigaram-thodu-vikram-prabhu

இந்தியாவில் பரவலாக நடைபெற்று வரும் ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தை கருவாக கொண்டு வந்திருக்கும் படம் சிகரம் தொடு. ஆனால் அதில் அப்பா செண்டிமெண்ட்,காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் கௌரவ்.

போலீஸ் அதிகாரியான சத்யராஜ், வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில் துளியும் ஆசையில்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார்.இந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது.

மோனலுக்கும் தனது கணவர் காவல்துறையில் இருக்ககூடாது என்ற கொள்கை. ஏற்கெனவே நாயகனுக்கு அந்த கொள்கைதான். இனி சொல்லவேணுமா கொள்கை இன்னும் தீவிரமாகிறது. ஆனால் சூழ்நிலை இன்ஸ்பெக்டர் ஆக்குகிறது. மோனலிடம் விக்ரம் பிரபு பேங்க் மேனேஜர் டிரைனிங்க்கு சிம்லா போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சென்னைக்கு போலீஸ் டிரைனிங்கு போகிறார். டிரைனிங்கிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்று அவர் கிறுக்குத்தனங்கள் செய்ய, கடைசியில் விதி சில நிபந்தனையுடன் அவர் இன்ஸ்பெக்டர் ஆகிறார்.

ஒருசமயம் அவர் பணிபுரியும் ஏரியாவில் ஏடிஎம்மில் பணம் திருட சிலர் முயற்சிக்க, சத்யராஜ் அவர்களுடன் மோதி தன் மகனிடம் பிடித்துக்கொடுக்க, வழக்கம்போல திருடர்கள் சிறையிலிருந்து தப்பிக்க, அப்போது பார்த்து சத்யராஜ் அங்கு வர, அவரை கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு செல்கின்றனர் திருடர்கள். சத்யராஜ் பிழைத்தாரா? விக்ரம் பிரபு திருடர்களை பிடித்தாரா? அவரது காதலியை கை பிடித்தாரா என்பதை காமெடி திரில்லர் என பரபரப்பாக கூறியிருக்கிறார் இயக்குனர் கௌரவ்.

படத்தின் இடைவேளை வரைக்கும் எடிஎம்மில் கொள்ளையடிக்கும் கும்பலை அவ்வப்போது காட்டினாலும் விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும்,சதீஷ் கலாய்க்கும் காட்சிகளுமே வருகிறது.முதல்பாதி படு ஜாலியாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

இடைவேளைக்கு பின்னரும் சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், லொள்ளுசபா சாமினாதன் என காமெடிக்கு பஞ்சமில்லை.
அப்பாவை ஏமாற்றும் பையனாக விக்ரம்பிரபு. வங்கியில் துணை மேனேஜர் ஆகும் ஆவலில் மேனேஜரிடம் காக்கா பிடிப்பது, சதீஷுடன் கலாய்ப்பது, பின் பாதியில் இன்ஸ்பெக்டராகவும் கலக்கியிருக்கிறார். அதிலும் சதீஷ் விக்ரம்பிரபு கூட்டணி இடைவேளை வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மோனல் கஜ்ஜர் நடித்திருக்கிறார். பார்த்தவுடன் அனைவரையும் கவரும் முகம். நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு. சத்யராஜ் ஒரு காலை இழந்தவராக நடித்திருக்கிறார். மனுஷன் நடிப்பில் பின்னியிருக்கிறார். அதிலும் ஏ.டி.எம் திருடகளிடம் அவர் மோதும் காட்சி அட்டகாசம்.

இமான் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. அதிலும் ஹரித்துவார் மலைக் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. ஏடிஎம் கொள்ளையராக நடித்திருக்கும் இயக்குனர் கௌரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதை மிகவும் ஆராய்ந்து அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார். தூங்கா நகரம் படத்துக்குபின் இவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம். நல்ல திரில்லர் சப்ஜெக்டை காமெடியுடன் கலந்து கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் சிகரம் தொடு ரசிகர்களை கவரும்


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com