An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

சவாலே சமாளி திரைவிமர்சனம்

 

 
Quick Stats
 

Genre:
 
Actor: ,
 
Plot
45%


 
Acting
53%


 
Directing
49%


 
Cinematography
48%


 
Costume
47%


 
Score
48%


 
Total Score
48%
48/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்களில் சிறப்பாக நடித்து பேர் வாங்கிய நடிகர் அசோக் செல்வன், பிந்து மாதவி, ஜெகன், மனோபாலா, கருணாஸ், ஊர்வசி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர்ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் சவாலே சமாளி. கழுகு இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இரண்டாவது படமான சவாலே சமாளி படத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக முயற்சி செய்துள்ளார் அசோக் செல்வன். டாப் டிவி என்ற டிவியை நடத்தும் கருணாஸ், ரூ.3 கோடி கடனுடன் சேனலை நடத்த முடியாமல் திண்டாடுகிறார். இந்நிலையில் இந்த டிவியில் […]

Posted September 6, 2015 by

 
Full Article
 
 

savale-Samali-13

சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்களில் சிறப்பாக நடித்து பேர் வாங்கிய நடிகர் அசோக் செல்வன், பிந்து மாதவி, ஜெகன், மனோபாலா, கருணாஸ், ஊர்வசி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர்ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் சவாலே சமாளி. கழுகு இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இரண்டாவது படமான சவாலே சமாளி படத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக முயற்சி செய்துள்ளார் அசோக் செல்வன்.

டாப் டிவி என்ற டிவியை நடத்தும் கருணாஸ், ரூ.3 கோடி கடனுடன் சேனலை நடத்த முடியாமல் திண்டாடுகிறார். இந்நிலையில் இந்த டிவியில் புதிதான வேலைக்கு சேரும் அசோக்செல்வன், உடன் வேலை செய்யும் ஜெகனுடன் இணைந்து சேனலை பிரபலமாக்க முயற்சி செய்கின்றனர். இடையில் தங்கையின் தோழி பிந்துமாதவியை அசோக்செல்வன் காதல் செய்கிறார்.

சேனலை பிரபலமாக்க உண்மையான காதலர்களை பெற்றோர்களின் சம்மதத்துடன் சேர்த்து வைக்கும் ஒரு லைவ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிவு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்தும் எந்த காதலர்களும் சேனலிடம் வந்து உதவி கேட்காததால், இவர்களே செட்டப் காதலர்கள் மற்றும் செட்டப் பெற்றோர்களை ஏற்பாடு செய்து ஊர்வசி மற்றும் மனோபாலாவை வைத்து நிகழ்ச்சியை நடத்துகின்றனர். எதிர்பார்த்ததைபோலவே நிகழ்ச்சி பிரபலமாகி, கருணாஸுக்கு பணம் கொட்டுகிறது.

இந்நிலையில் ஒரு உண்மையான காதல் ஜோடி தங்களை சேர்த்து வைக்குமாறு வருகின்றனர். ஆனால் பெரிய அரசியல்வாதி மற்றும் ஜாதிக்கட்சி தலைவர்களான அவர்களின் பெற்றோரோ, இவர்களை சேர்த்து வைத்தால் உங்களை கொன்றுவிடுவோம் என்கின்றனர். ஹீரோவின் லவ்வரோ அவர்களை சேர்த்து வைத்தால் தான் நம்முடைய காதல் என்கிறார். இப்படி பல சவால்களை சமாளித்து ஹீரோவும் ஜெகனும் அந்த ஜோடியை சேர்த்து வைத்தார்களா? இல்லையா? என்பதே மீதி கதை.

அசோக்செல்வன் படம் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்தாலும் கதையே இல்லாமல் ஓடும் படத்தில் இவர் என்னதான் நடித்தாலும் அது எடுபடாமல் போகிறது. இருந்தாலும் இவரை பொருத்தவரை காதல், காமெடி காட்சிகளில் சிறப்பாகவே செய்துள்ளார். பிந்துமாதவி ஹீரோயின் என்பது டைட்டில் கார்டில் போட்டதால்தான் ஆடியன்ஸ்களுக்கு தெரிகிறது. மற்றபடி இந்த படத்தில் இவர் வரும் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஜெகன், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், கருணாஸ், மற்ற அனைவரின் நடிப்பு ஓகே ரகம். தமன் இசையில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. மொத்தத்தில் சாவாலே சமாளி படத்தை சமாளித்து பார்த்து விட்டு நிம்மதியாக வெளியேவருவது சவாலான விஷயம் தான்.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com