An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

பண்டிகை திரை விமர்சனம்

 
Pandigai Movie Stills (6)
Pandigai Movie Stills (6)
Pandigai Movie Stills (6)

 
Quick Stats
 

Genre:
 
Plot
75%


 
Acting
65%


 
Directing
71%


 
Cinematography
78%


 
Costume
51%


 
Score
71%


 
Total Score
69%
69/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து அனாதை விடுதியில் வளர்ந்து வரும் கிருஷ்ணா முரட்டுத்தனத்துடன் வளர்ந்து வருகிறார். நண்பர்கள் கருணாகரன், ப்ளாக்பாண்டி ஆகியோருடன் சுற்றும் கிருஷ்ணா ஆனந்தியை பார்த்ததும் காதலிக்கிறார். ஆனால் தனது ஆசையான வெளிநாட்டுக்கு சென்று வேலைபார்த்து சம்பாதிக்க வேண்டும் என்கிற கனவை அடைய சிறு சிறு வேலைபார்த்து சம்பாதிக்கிறார். எட்டாயிரம் ரூபாய் கட்ட பணம் இல்லாததால் சென்னையில் சட்டவிரோதமாக நடக்கும் குத்துச்சண்டைக்கு போகலாம் என்கிற அறிமுகம் சரவணன் மூலம் கிடைக்கிறது. இந்த சண்டையை நடத்தும் […]

Posted July 14, 2017 by

 
Full Article
 
 

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து அனாதை விடுதியில் வளர்ந்து வரும் கிருஷ்ணா முரட்டுத்தனத்துடன் வளர்ந்து வருகிறார். நண்பர்கள் கருணாகரன், ப்ளாக்பாண்டி ஆகியோருடன் சுற்றும் கிருஷ்ணா ஆனந்தியை பார்த்ததும் காதலிக்கிறார். ஆனால் தனது ஆசையான வெளிநாட்டுக்கு சென்று வேலைபார்த்து சம்பாதிக்க வேண்டும் என்கிற கனவை அடைய சிறு சிறு வேலைபார்த்து சம்பாதிக்கிறார். எட்டாயிரம் ரூபாய் கட்ட பணம் இல்லாததால் சென்னையில் சட்டவிரோதமாக நடக்கும் குத்துச்சண்டைக்கு போகலாம் என்கிற அறிமுகம் சரவணன் மூலம் கிடைக்கிறது. இந்த சண்டையை நடத்தும் மும்பை தாதா மதுசூதனன் சண்டையில் பெட் வைத்து அப்பாவிகளின் சொத்தையும் அவர்களின் பணத்தையும் சுருட்டுகிறார். இந்த சண்டையில் தன்னுடைய குடும்பச் சொத்துக்களை இழந்து விட மனைவி அவரை விட்டு பிரிகிறார்.

இதனால் மனம் வெறுத்த அவர் விட்ட பணத்தை பிடிக்க எப்படியாவது கிருஷ்ணாவை சண்டை செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் இந்த சண்டையில் தோற்றவர்களே ஜெயித்தவர்களாக கருதப்படுவார்கள் என்று வில்லன் ரகசியமாக முடிவெடுத்திருப்பது தெரியாமல் சண்டையில் கலந்து கொள்கிறார் கிருஷ்ணா. இந்த சண்டையில் அவர் ஜெயித்தாரா, சரவணன் இழந்த பணத்தை மீட்டாரா என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் பெரோஷ்.

கிருஷ்ணா நிறைவான நடிப்பை யதார்த்தமாக தந்திருக்கிறார். கிருஷ்ணாவுக்கு நடிப்பது தெரியாமல் நடிக்க சொல்லிகொடுத்த இயக்குனர் பெரோஷ¨க்கு பாராட்டுகள். அநாதையாக நின்று சித்தப்பாவிடம் பணம் கேட்கும்போது பரிதாபத்தை அள்ளுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் அக்கறையோடு நடித்திருக்கிறார் கிருஷ்ணா. அவரது பட வரிசையில் இது முக்கியமான  ஆனந்திக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை கிடைத்த வாய்ப்பில் நிறைவு செய்திருக்கிறார்.

சரவணன் பருத்திவீரனுக்குப் பிறகு கவனிக்க வைத்திருக்கிறார். பணத்தை இழந்து நிற்கும்போது பரிதாபம்.  வில்லனாக மதுசூதனன் பயமுறுத்தியிருக்கிறார். நிதின் சத்யா, கருணாஸ் ப்ளாக் பாண்டி ஆகியரும் நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள். புதிய களத்தில் இயக்குனர் திரமையை நிரூபித்திருக்கிறார். சில இடங்களில் வாட்ஸ் அப் பார்க்க வைக்கும் தொய்வு இருக்கிரது. இரண்டாம்பாதியில் வரும் பாடல் சறுக்கல் பின்னனி இசை ஓகே.  கல்யாண் அசார் இருவரின் ஒளிப்பதிவு சூழலுக்கு ஏற்ப காட்டியிருப்பது அருமை


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com