An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

நிபுணன் விமர்சனம்

 

 
Quick Stats
 

Plot
69%


 
Acting
71%


 
Directing
76%


 
Cinematography
79%


 
Costume
75%


 
Score
72%


 
Total Score
74%
74/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

அர்ஜுனின் 150 வது படமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அருண் வைத்தியநாதன் கதை, இயக்கத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுகாசினி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் நிபுணன். கதைப்படி ஆக்சன் கிங் அர்ஜுன் முதலிலே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசிக்கும் போலீஸ் மேனாக நடித்துள்ளார், இவர்களின் உதவியாளர்களாக நடிகர் பிரசன்னாவும், வரலட்சுமியும் நடித்துள்ளனர், சில்பா அர்ஜுனின் மனைவியாக நடித்துள்ளார். அர்ஜுன் பணிபுரியும் போலீஸ் ஆபீசுக்கு ஒரு மாஸ்க் […]

Posted July 29, 2017 by

 
Full Article
 
 

அர்ஜுனின் 150 வது படமான பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அருண் வைத்தியநாதன் கதை, இயக்கத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், சுமன், சுகாசினி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் நிபுணன்.

கதைப்படி ஆக்சன் கிங் அர்ஜுன் முதலிலே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசிக்கும் போலீஸ் மேனாக நடித்துள்ளார், இவர்களின் உதவியாளர்களாக நடிகர் பிரசன்னாவும், வரலட்சுமியும் நடித்துள்ளனர், சில்பா அர்ஜுனின் மனைவியாக நடித்துள்ளார்.

அர்ஜுன் பணிபுரியும் போலீஸ் ஆபீசுக்கு ஒரு மாஸ்க் போட்ட பொம்மை ஒன்று கோரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது, ஆனால் இவர்கள் அதை சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டு விடுவார்கள். இதனை தொடர்ந்து ஒரு கொலை நடக்கும் இந்த கொலைக்கும் அந்த மாஸ்க் பொம்பைக்கும் தொடர்பிருப்பது தெரிய வருகிறது.

இதே போல அடுத்தடுத்து 3 கொலைகள் நடக்கும், இறுதியாக அந்த கொலைகாரன் கொல்லப் போவது அர்ஜுனை தான் என்பது தெரிய வரும்.

அர்ஜுன் அந்த கொலைகாரனிடம் இருந்து தப்பிக்கிறாரா? இல்லையா? தொடர் கொலைகளின் பின்னணி என்ன என்பதை கண்டு பிடிக்கிறாரா ? என்பது தான் படத்தின் மீதி கதையும் களமும்.

அர்ஜுனுக்கு இது 150-வது படம், இப்படத்தில் இவர் வழக்கமான போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தாலும் அழகாகவும் அருமையாகவும் அவரது நடிப்பை படத்திற்கு தேவையான அளவிற்கு கச்சிதமாக கொடுத்துள்ளார். மேலும் அவருடைய பெண்ணிற்கு சிறந்த அப்பாவாகவும், சிறந்த கணவராகவும் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரசன்னா மற்றும் வரலக்ஷ்மி ஆகிய இருவரும் அர்ஜுனின் உதவியாளர்களாக நடித்துள்ளனர், இவர்களது நடிப்பு அர்ஜுனுக்கு பக்க பலமாக இருந்தாலும் இவர்களின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.

சுமன், சுகாசினி , வைபவ் ரெட்டி மற்றும் உமா ரியாஸ்கான் ஆகியோர் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவர்களுக்கான நடிப்பை அருமையாக கொடுத்திருக்கிறார்கள்.

அரவிந்த் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அவரது பணியை போதுமான அளவிற்கு கொடுத்துள்ளார். மேலும் படத்தொகுப்பை சதீஸ் சூர்யா செய்துள்ளார்.

படத்திற்கு எஸ்.நவீன் இசையமைத்துள்ளார், படத்திற்கான பேக் ரவுண்டு மியூசிக் அருமையாக அமைத்துள்ளார், பாடல்கள் அனைத்தையும் கேட்கும் விதத்தில் அழகாகவே கொடுத்துள்ளார்கள்.

இயக்குனர் அருண் வைத்தியநாதன் வழக்கமான திரில்லர் கதையாக இருந்தாலும் படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் நிபுணன் ஜொலிக்கிறான்!


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com