An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

Nagarvalam Movie Review

 
dc-Cover-m5eu8kct46se4ikgirbbr6fv25-20170422194834.Medi
dc-Cover-m5eu8kct46se4ikgirbbr6fv25-20170422194834.Medi
dc-Cover-m5eu8kct46se4ikgirbbr6fv25-20170422194834.Medi

 
Quick Stats
 

Plot
0%


 
Acting
0%


 
Directing
0%


 
Cinematography
0%


 
Costume
0%


 
Score
0%


 
Total Score
0%
0/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுபவர் யுத்தன் பாலாஜி. தண்ணீர் சப்ளை செய்யும் இடத்தில் வசிக்கும் தீக்ஷிதா மீது காதல் வருகிறது. நாளடைவில் மோதல் காதலாக மாறுகிறது. தீக்ஷிதாவின் அப்பா, அரசியல்வாதி சித்தப்பா, தாதா அண்ணன் ஆகிய மூவரும் காதலை எதிர்க்கிறார்கள். யுத்தன் பாலாஜியை எச்சரிக்கையும் செய்கிறார்கள். அதனால் காதலில் பிடிவாதமாக இருக்கும் இருவரையும் தீர்த்துக் கட்ட தீக்ஷிதாவின் சித்தப்பா முடிவு செய்கிறார். இதனை எதிர்க்கும் தீக்ஷிதாவின் அண்ணன் இருவரையும் காப்பாற்றி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். […]

Posted April 21, 2017 by

 
Full Article
 
 

dc-Cover-m5eu8kct46se4ikgirbbr6fv25-20170422194834.Medi

சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுபவர் யுத்தன் பாலாஜி. தண்ணீர் சப்ளை செய்யும் இடத்தில் வசிக்கும் தீக்ஷிதா மீது காதல் வருகிறது. நாளடைவில் மோதல் காதலாக மாறுகிறது. தீக்ஷிதாவின் அப்பா, அரசியல்வாதி சித்தப்பா, தாதா அண்ணன் ஆகிய மூவரும் காதலை எதிர்க்கிறார்கள். யுத்தன் பாலாஜியை எச்சரிக்கையும் செய்கிறார்கள். அதனால் காதலில் பிடிவாதமாக இருக்கும் இருவரையும் தீர்த்துக் கட்ட தீக்ஷிதாவின் சித்தப்பா முடிவு செய்கிறார். இதனை எதிர்க்கும் தீக்ஷிதாவின் அண்ணன் இருவரையும் காப்பாற்றி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் யுத்தன் பாலாஜி , கதாநாயகியாக வரும் தீக்ஷிதா, ஹீரோவின் நண்பராக வரும் பாலசரவணன், யோகி பாபு, ஒரு குத்துப்பாட்டுக்கு சிறப்பு தோற்றத்தில் பசுபதி, அப்பாவாக வரும் மாரிமுத்து, ரவுடி அண்ணனாக வரும் முத்துக்குமார், நமோ நாராயணன், அஞ்சாதே ஸ்ரீதர், அட்டகத்தி வேலு, ரிந்து ரவி, பேபி என படத்தில் அனைவரையும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் தமிழ் தென்றலுக்கு சபாஷ் போடலாம்.

பவன் கார்த்திக்கின் இசையில் பாடல்கள் இனிமை.

இயக்கம் மார்க்ஸ்- லாரி டிரைவரின் காதல் சாதிப் பிரச்னையால் அலைக்கழிக்கப்பட, ஒன்று சேரும் நேரத்தில் எதிர்பாராத டிரஜிடியாக முடித்து படத்திற்கு பலம் சேர்ப்பதாக நினைத்து பலவீனமாக அமைத்து ஏற்கனவே பார்த்த படங்களில் கலவையாக தந்திருக்கிறார் இயக்குனர் மார்க்ஸ்.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com