An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

AAA திரை விமர்சனம்

 

 
Quick Stats
 

Plot
0%


 
Acting
0%


 
Directing
0%


 
Cinematography
0%


 
Costume
0%


 
Score
0%


 
Total Score
0%
0/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் “AAA”. படத்தின் பெரிய பலமே சிம்பு தான், மதுரை மைக்கலாக மதுரை ஸ்லாங், மேனரிசம் என்பதையெல்லாம் மறந்து தன் ஸ்டைலில் கலக்குகிறார். அதேபோல் அஸ்வின் தாத்தாவாக மாறும் போது ஆள் பார்க்க வயதாக தெரிந்தாலும், குரல் பற்றியெல்லாம் கவலையே இல்லை, தன் ரசிகர்கள் மீது உள்ள நம்பிக்கையில் ஒன் மேன் ஷோவாக நிமிர்ந்து நிற்கின்றார். இவரை தவிர படத்தில் […]

Posted June 25, 2017 by

 
Full Article
 
 

_96609348_dsc_7600

திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் “AAA”.

படத்தின் பெரிய பலமே சிம்பு தான், மதுரை மைக்கலாக மதுரை ஸ்லாங், மேனரிசம் என்பதையெல்லாம் மறந்து தன் ஸ்டைலில் கலக்குகிறார். அதேபோல் அஸ்வின் தாத்தாவாக மாறும் போது ஆள் பார்க்க வயதாக தெரிந்தாலும், குரல் பற்றியெல்லாம் கவலையே இல்லை, தன் ரசிகர்கள் மீது உள்ள நம்பிக்கையில் ஒன் மேன் ஷோவாக நிமிர்ந்து நிற்கின்றார்.

இவரை தவிர படத்தில் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ஏதோ துபாய் டான் என பில்டப் கொடுத்து மதுரைக்கு கதைக்களம் வர, என்னென்னவோ நடக்க போகின்றது என பார்த்தால் மழையில் நனைந்த பட்டாசு போல் ஆகின்றது அடுத்தடுத்த காட்சிகள்.
யுவனின் தெறிக்கும் இசையில் சிம்பு நடந்து மட்டுமே வருகின்றார். சில இடங்களில் பன்ச் பேசுகின்றார், கூட இருப்பவர்கள் அவரை பில்டப் செய்கின்றனர், அதை தவிர வேறு ஏதும் ரசிப்பதற்கு இல்லை.

அழுத்தமே இல்லாமல் முடியும் முதல் பாதியை தொடர்ந்து அஸ்வின் தாத்தா கலக்க போகிறார் என்று பார்த்தால், அவர் தமன்னாவை காதலிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் தான் இரண்டாம் பாதி. அதிலும் ஒரு சுவாரசியமும் இல்லை.

மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா காட்சிகள் மட்டும் சிரிப்பிற்கு கேரண்டி, வித்தியாசமாக செய்கிறேன் என்று கிளைமேக்ஸில் மற்றொரு கதாபாத்திரத்திற்கு லீட் கொடுப்பதெல்லாம் எந்த ஒரு பயனும் இல்லை. முதல் பாகமே முடிந்தால் போதும் என்ற மனநிலை வந்துவிடுகின்றது.

சிம்புவிற்கு பிறகு படத்தை தாங்கி பிடிப்பது யுவனின் பின்னணி இசை தான். பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் தீம் மியூஸிக்கில் மிரட்டியுள்ளார். கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கின்றது.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com