An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

பென்சில் விமர்சனம்

 

 
Quick Stats
 

Genre:
 
Director:
 
Actor:
 
Plot
50%


 
Acting
80%


 
Directing
60%


 
Cinematography
80%


 
Costume
90%


 
Score
75%


 
Total Score
73%
73/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

முதல் முறையாக ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனரும் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனருமான மணி நாகராஜ் இயக்கத்தில் பல தடைகளைக் கடந்து வெளிவந்துள்ள படம் “பென்சில்”. இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை எஸ் பி ராகவேஷின் கல்சன் மூவீஸ் தயாரிக்க பிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர்கள் : ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா, விடிவி கணேஷ், ஊர்வசி, ஷாரிக் ஹாசன் மற்றும் பலர் இசை […]

Posted May 14, 2016 by

 
Full Article
 
 

Pencil-Movie-Posters

முதல் முறையாக ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனரும் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனருமான மணி நாகராஜ் இயக்கத்தில் பல தடைகளைக் கடந்து வெளிவந்துள்ள படம் “பென்சில்”. இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை எஸ் பி ராகவேஷின் கல்சன் மூவீஸ் தயாரிக்க பிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர்கள் : ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா, விடிவி கணேஷ், ஊர்வசி, ஷாரிக் ஹாசன் மற்றும் பலர்

இசை : ஜி வி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : கோபி அமர்நாத்

படத்தொகுப்பு : ஆண்டனி

தயாரிப்பு : எஸ் பி ராகவேஷ் (கல்சன் மூவீஸ்)

கதை, திரைக்கதை, இயக்கம் : மணி நாகராஜ்

விமர்சனம்:

உயர்நிலைப் பள்ளியில் நடக்கும் ஒரு மாணவனின் கொலையை சார்ந்து நடக்கும் சம்பவங்களே “பென்சில்”. படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வரும் மூன்று மாணவர்களில் ஒருவர் பள்ளியின் முதல் மாணவர் ஜி வி பிரகாஷ், மற்றொருவர் ஷாரிக் ஹாசன், மற்றொருவர் மாணவி ஸ்ரீ திவ்யா. ஒரு நாள் ஜி வி பிரகாஷின் இரண்டு வருட கடும் உழைப்பின் பயனாக உருவாகிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை ஷாரிக் ஹாசன் எரித்து விட, இருவருக்கும் இடையே தொடங்குகிறது கடும் மோதல். இதுபோன்ற பல மோதல்கள் இருவருக்குமிடையே அடுத்தடுத்து ஏற்படுகிறது. ஒரு நாள் ஐஎஸ்ஓ ஆபிஸர் ஊர்வசி, பள்ளியின் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழுக்காக இன்ஸ்பெக்ஷன் வந்திருக்கும் வேளையில், பள்ளியறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார் ஷாரிக் ஹாசன். இந்நிலையில், கொலையின் மீதான சந்தேகத்தின் பேரில் சிக்குகிறார் ஜி வி பிரகாஷ். இறுதியில் ஜி வி பிரகாஷ், ஸ்ரீ திவ்யாவுடன் இணைந்து கொலையாளியை கண்டுபிடித்தாரா? பள்ளிக்கு தரச் சான்றிதழ் கிடைத்ததா? இல்லையா? என்பதை சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்து கூறியிருப்பதே “பென்சில்” படத்தின் மீதிக்கதை.

பள்ளி மாணவர்களாக வரும் ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா ஆகிய இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் ஜி வி பிரகாஷ் பள்ளி மாணவனாகவே மாறியிருக்கிறார். ஸ்ரீதிவ்யா படம் முழுக்க ஹீரோவுடன் வந்தாலும் படத்திற்கு பலம் இவர்தான். சில இடங்களில் கொலையாளியை பிடிக்க பெரிய மனுஷியாக திட்டம் தீட்டுவதெல்லாம் ஓவர். இருவருக்குமான ஜோடிப் பொருத்தம் நன்றாக பொருந்தியுள்ளது. மாணவ வில்லனாக வரும் ஷாரிக் ஹாசன் (நடிகை உமா ரியாஸ் கானின் மகன்) அறிமுகப்படத்திலேயே அசத்தலாக வில்லத்தனம் செய்திருக்கிறார். ஐஎஸ்ஓ ஆபிஸர் ஊர்வசி, பிரின்ஸி டி.பி.கஜேந்திரன், விடிவி கணேஷ், அபிஷேக் மற்றும் திருமுருகன் ஆகியோரில் விடிவி கணேஷ் கலக்கியிருக்கிறார்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், ஜீ.வி.பிரகாஷின் இசையும் படத்திற்கு பெரும்பலம்.

மொத்தத்தில் “பென்சில்” ஷார்ப்…!!!


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com