An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

பவர் பாண்டி திரை விமர்சனம்

 
Pa Paandi
Pa Paandi
Pa Paandi

 
Quick Stats
 

Plot
0%


 
Acting
0%


 
Directing
0%


 
Cinematography
0%


 
Costume
0%


 
Score
0%


 
Total Score
0%
0/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

கோலிவுட்டில் தன் நடிப்புத் திறமையாலேயே முன்னனி நாயகனாக தன்னை நிலைநாட்டியவர் நடிகர் தனுஷ். கவிஞர், பாடகர் என்று பல திறமைகளையும் தனக்குள்ளே அடக்கி கொண்டவர். ஒரு பாடல் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் என்றால் அது மிகையாகாது. பிறகு பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி கண்டார். அந்தத் தொடர் வெற்றிதான் அவரை ஹாலிவுட் வரை சென்று சாதனை புரிய வைத்தது. இந்நிலையில், தனக்குள் மற்றுமொரு திறமையும் ஒளிந்துள்ளது என்பதை பவர் பாண்டி படத்தை எழுதி, இயக்கியதின் […]

Posted April 16, 2017 by

 
Full Article
 
 

Pa Paandi

கோலிவுட்டில் தன் நடிப்புத் திறமையாலேயே முன்னனி நாயகனாக தன்னை நிலைநாட்டியவர் நடிகர் தனுஷ். கவிஞர், பாடகர் என்று பல திறமைகளையும் தனக்குள்ளே அடக்கி கொண்டவர். ஒரு பாடல் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் என்றால் அது மிகையாகாது. பிறகு பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி கண்டார். அந்தத் தொடர் வெற்றிதான் அவரை ஹாலிவுட் வரை சென்று சாதனை புரிய வைத்தது. இந்நிலையில், தனக்குள் மற்றுமொரு திறமையும் ஒளிந்துள்ளது என்பதை பவர் பாண்டி படத்தை எழுதி, இயக்கியதின் மூலம் நிரூபித்தி வெற்றிக் கண்டிருக்கிறார்.

சினிமாவில் ஸ்டண்டு மாஸ்டராக `பவர்’ பாண்டி என்ற பட்டத்தோடு வலம் வந்து தன் ஒரே மகனாக பிரசன்னாவை நன்முறையில் வளர்த்து ஆளாக்குகிறார். முதுமையில் இருக்கும் தன் தந்தைக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறார் பிரசன்னா. வழக்கமான மருமகள் கொடுமையில்லை. பேரப் பிள்ளைகளை கொஞ்சமுடியாமல், விளையாட முடியாமல் போகும் தவிப்பும் இல்லை. முதுமையில் இயல்பாக வரும் எந்த வியாதியும் இல்லை. இருப்பினும், தனக்கென ஒரு வாழ்க்கையை வாழாமல் ஏதோ மனதில் ஒரு வெறுமையை உணர்கிறார் ராஜ்கிரண்.

ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு வாழ்க்கையை வாழ விரும்பும் அவர், ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்படி அவர் எங்கு செல்கிறார்? அவருடைய வாழ்க்கையை அவர் வாழ்ந்தாரா? பிரசன்னா தன் அப்பாவை தேடினாரா? ராஜ்கிரண் மேல் பாசம் வைத்திருந்த பேரப்பிள்ளைகள் என்ன ஆனார்கள்? என்பதை சொல்வதை படத்தின் மீதிக் கதை.

ஒரு குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் யதார்த்தமாக காட்டியிருக்கிறார் தனுஷ். நான் உனக்கு அப்பாவாக இருந்தபோது நன்றாக இருந்தது, ஆனால் நீ எனக்கு அப்பாவாக இருப்பதை என்னால் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப என்னை மாற்றிக் கொள்ள இயலவில்லை என்ற ஒற்றை வரிகளில் ஆழமான கருத்து ஒவ்வொரு குடும்பத்தில் வாழும் மகன்களுக்கும், மகள்களுக்கும் எளிதாக புரியும் என்பதில் ஐயமில்லை. ராஜ்கிரணின் இயல்பான நடிப்பு ஒரு வயதானவருக்குள் இத்தனை ஆசைகளா? தன் குடும்பம், மனைவி, பிள்ளைகள் என்று வாழ்ந்து, தனக்கென ஒரு வாழ்க்கையை யோசிக்கக்கூட நேரமில்லாமல், வயதான பிறகு தனக்கென ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்பதை இயக்குநர் தனுஷ் யதார்த்தமான திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருக்கிறார்.

எந்த நோக்கமும் இல்லாமல் செல்லும் ராஜ்கிரணுக்கு, வழியில் தன் முதல் காதலியை தேடிப் போகும் சந்தர்ப்பம் உருவாக, தன் காதலியின் பசுமையான நினைவுகளை இத்தனை வருடங்களுக்குப் பின்னும் அப்படியே வைத்திருக்கிறார் என்பது அவரது யதார்த்த நடிப்பில் நன்றாக தெரிகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் திரையில் தோன்றியிருக்கிறார் ரேவதி. முதிர்ந்த வயதில் தன்னைத் தேடி வந்த தன் முதல் காதலனை பார்க்கும் போது மனதில் மறைந்து வைத்திருந்த காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரசன்னா தன்னுடை அப்பா ஊர் வம்பு இழுத்துக் கொண்டு வரும்போது, அவரைக் கண்டிக்கும் போதும், அதே அப்பா எங்கு சென்றார் எனத் தெரியவில்லை என்று அவரை தேடி அலையும் போதும் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் உருக வைக்கிறார், பாராட்டுக்கள்.

சாயாசிங் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும், ரோபோ சங்கரும் ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் பதிகின்றனர். திவ்யதர்ஷினி தன் அம்மாவுடைய முதல் காதலை ஆதரித்து பேசும்போது கைதட்டல் பெறுகிறார். மதுரை பெண்ணாக வரும் மடோனாவுக்கு ஒப்பனையில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். சண்டை பயிற்சி சில இடங்களில் யதார்த்தமாக அமையாதது வருத்தம் அளிக்கிறது.

வசனங்கள் எளிமையாகவும், அதே சமயத்தில் சொல்ல வந்த கருத்துக்களை ஆழமாகவும் கூறியிருப்பது அருமை. சிறு வயதில் பிரிந்த காதலர்கள் வயதான பிறகு சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை நாகரிகமாக கூறிய இயக்குநர் தனுஷிற்கு வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குநராக தன்னை வெளிபடுத்தியிருக்கிறார் தனுஷ்.

மொத்தத்தில் பவர் பாண்டி வலிமையோடு…


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com