An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

தங்கரதம் திரை விமர்சனம்

 
IMG_1555
IMG_1555
IMG_1555

 
Quick Stats
 

Plot
0%


 
Acting
0%


 
Directing
0%


 
Cinematography
0%


 
Costume
0%


 
Score
0%


 
Total Score
0%
0/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சுற்றுவட்ட கிராமத்தில் இருந்து பலர் காய்கறிகளை ஏற்றி வருகிறார்கள். அப்படி ஒரு கிராமத்தில் இருந்து டெம்போ வேனில் தினமும் காய்கறி ஏற்றி வருபவர் தான் ஹீரோ வெற்றி. அவரது டெம்போ வேனின் பெயர் தான் தங்கரதம். அதே ஊரில் உள்ள மற்றொரு டெம்போ வேனான பரமன் வேனின் டிரைவரும், முதலாளியுமான சவுந்தரராஜனும், வெற்றியும் தொழில் ரீதியாக அடிக்கடி முட்டிக்கொள்கிறார்கள். இதற்கிடையே பரமனின் தங்கை ஹீரோயின் அதிதி கிருஷ்ணாவுக்கும், வெற்றிக்கும் இடையே காதல் […]

Posted June 18, 2017 by

 
Full Article
 
 

IMG_1555

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சுற்றுவட்ட கிராமத்தில் இருந்து பலர் காய்கறிகளை ஏற்றி வருகிறார்கள். அப்படி ஒரு கிராமத்தில் இருந்து டெம்போ வேனில் தினமும் காய்கறி ஏற்றி வருபவர் தான் ஹீரோ வெற்றி. அவரது டெம்போ வேனின் பெயர் தான் தங்கரதம். அதே ஊரில் உள்ள மற்றொரு டெம்போ வேனான பரமன் வேனின் டிரைவரும், முதலாளியுமான சவுந்தரராஜனும், வெற்றியும் தொழில் ரீதியாக அடிக்கடி முட்டிக்கொள்கிறார்கள். இதற்கிடையே பரமனின் தங்கை ஹீரோயின் அதிதி கிருஷ்ணாவுக்கும், வெற்றிக்கும் இடையே காதல் ஏற்பட, அதே சமயம் டெம்போ வேன் மோதல் முற்றிப்போய், சவுந்தரராஜன் வெற்றியை கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிடுகிறார். சவுந்தரராஜனை சமாதானப்படுத்தும் முயற்சியாக அவரது தங்கையை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க, தங்கரதம் டெம்போ வேனின் முதலாளி நரேன் முடிவு செய்துவிடுகிறார்.

வெற்றியின் காதல் விவகாரம் தெரியாமல், அதிதியை தனது மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் வேலைகளில் நரேன் மும்முரமாக ஈடுபட, அதிதியோ வெற்றியை திருமணம் செய்துக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறார். ஒரு புறம் தன்னை மகனாக பார்க்கும் முதலாளி, மறுபுறம் தனக்காக வாழும் காதலி, என்ற இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படும் ஹீரோ காதலில் ஜெயித்தாரா இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸ்.

புதுமுகம் வெற்றிக்கு கிராமத்து முகம் இல்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை திண்டுக்கல் மாவட்ட மனிதராக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார். ஹீரோயினை மையப்படுத்திய கதை என்றாலும், அவருக்கு நடிக்க வாய்ப்பு என்னவோ குறைவு தான். அந்த குறைந்த வாய்ப்பிலும் நிறைவான பணியை செய்திருக்கிறார் அதிதி கிருஷ்ணா. சவுந்தரராஜன் எப்போதும் போல தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். தங்கரதம் டெம்போ வேனின் முதலாளியாக அறிமுகமாகும் ஆடுகளம் நரேன், தனது நடவடிக்கை மூலம் ஹீரோவுக்கு நிகரான ஒரு இடத்தைப் பிடித்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் ஜேக்கப்.ஆர் படம் முழுவதும் தனது பணியை பாராட்டும்படி செய்திருக்க, இசையமைப்பாளர் டோனி பிரிட்டோவின் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்பட பயணித்திருக்கிறது. இவை இரண்டையும் ரொம்ப அளவாக கட் பண்ணி முழு படத்தையும் நேர்த்தியாக்கி இருக்கிறது சுரேஷ் அர்ஸ்

மொத்தத்தில், இந்த ‘தங்கரதம்’ காதலுக்கு மரியாதை சேர்த்திருக்கிறது.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com