An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

சிவலிங்கா திரை விமர்சனம்

 

 
Quick Stats
 

Plot
0%


 
Acting
0%


 
Directing
0%


 
Cinematography
0%


 
Costume
0%


 
Score
0%


 
Total Score
0%
0/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

லாரன்ஸுக்கும் பேய்க்கும் எப்போதும் ஒரு வெற்றி கனேக்‌ஷன் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அவர் இயக்கிய முனி, காஞ்சனா, காஞ்சனா-2 வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்நிலையில் மீண்டும் ஒரு பேய் களத்தில் கமர்ஷியல் கிங் பி.வாசு இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் தான் சிவலிங்கா. இந்த பேய் மிரட்டியதா? பார்ப்போம். சக்தி வாசு படத்தின் ஆரம்பத்திலேயே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யப்படுகின்றார். அந்த கேஸை நீதிமன்றம் தற்கொலை என்று முடித்து வைக்கின்றது. ஆனால், […]

Posted April 16, 2017 by

 
Full Article
 
 

lawrence-linga-759

லாரன்ஸுக்கும் பேய்க்கும் எப்போதும் ஒரு வெற்றி கனேக்‌ஷன் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அவர் இயக்கிய முனி, காஞ்சனா, காஞ்சனா-2 வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்நிலையில் மீண்டும் ஒரு பேய் களத்தில் கமர்ஷியல் கிங் பி.வாசு இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் தான் சிவலிங்கா. இந்த பேய் மிரட்டியதா? பார்ப்போம்.

சக்தி வாசு படத்தின் ஆரம்பத்திலேயே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யப்படுகின்றார். அந்த கேஸை நீதிமன்றம் தற்கொலை என்று முடித்து வைக்கின்றது.

ஆனால், இது கொலை தான் என சக்தியின் காதலி மீண்டும் அந்த வழக்கை எடுக்க, சொல்ல யாருக்கும் தெரியாமல் இந்த கேஸ் புலானய்வு துறைக்கு மாறுகின்றது.

லாரன்ஸ் அந்த கேஸை எடுத்து கண்டுப்பிடிக்க தொடங்கும் முன்னரே அவரின் மனைவி ரித்திகா சிங் மீது சக்தியின் ஆவி ஆக்ரமிக்கின்றது.

நீ என்னை கொலை செய்தது யார்? என்று கண்டுப்பிடித்தால் தான் உன் மனைவி உடலைவிட்டு செல்வேன் என சக்தி கூற, பின் லாரன்ஸ் எடுக்கும் அதிரடியே மீதிக்கதை,
படத்தை பற்றிய அலசல்

லாரன்ஸ் 1500வது தடவையாக பேயை பார்த்து பயப்படுகின்றார், பின் பேய் கூட பேசுகின்றார், வழக்கம் போல் பேய் ஆசையை நிறைவேற்றுகின்றார், முனி சீரியஸில் பார்த்த அதே லாரன்ஸ் என்றாலும், இதில் அவரின் ஓவர் ஆக்டிங் இல்லமால், கொஞ்சம் இயல்பாக நடித்துள்ளார். சக்தி இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பெஸ்ட் என்ற அளவிற்கு நடித்துள்ளார்.

ரித்திகா சிங் பாக்ஸராக களம் இறங்கி, ஆண்டவன் கட்டளை படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்த பிறகு தற்போது தான் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் ஹீரோயினாக மாறியுள்ளார், ஆடல், பாடல் என இவரும் இந்த ட்ரெண்டுக்கு வந்துவிட்டாரே என்று வருத்தப்பட வைக்கின்றது. இருந்தாலும் இவர் உடலில் பேய் வரும் போது அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் செம்ம, ஆனால், கவர்ச்சி எல்லாம் வேண்டாம் ரித்திகா.

நீண்ட வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்தது இந்த வடிவேலுவிற்காக தான் என்று சொல்லும்படி கலக்கியுள்ளார். அதிலும் Use me என்ற வசனம் இனி மிமி கிரியேட்டர்களுக்கு விருந்து தான், தான் எப்படி திருடன் ஆனேன் என்பதை ஊர்வசியிடம் சொல்லிக்காட்டும் இடம் சிரிப்பு சரவெடி.

பி.வாசு பல வருடமாக பல மெகா ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வந்தவர், இவர் திரைப்பயணத்தில் இல்லை தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாராலும் மறக்க முடியாத படம் சந்திரமுகி, இப்படத்தின் இரண்டாம் பாகம் போல் தான் உள்ளது இந்த சிவலிங்கா. ஆனால், அதில் பேய் இல்லை, இதில் பேய் உள்ளது, அவ்வளவு தான் வித்தியாசம்.

படம் என்ன தான் கமர்ஷியல் மசாலா என்றாலும் பல இடங்களில் லாஜிக் மீறல், ஆத்மாவில் நல்ல ஆத்மா, என் உடலுக்குள் வா என்றால் பேய் வந்துவிடுகின்றது, போ என்றால் போய்விடுகின்றது, இது நல்ல பேயா? கெட்ட பேயா? என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் வந்து செல்கின்றது. ஒளிப்பதிவு தெலுங்கு படம் போல் கலர்புல்லாக உள்ளது, தமன் இதுவரை உங்களுக்கு என்ன பாடல் கொடுத்தேன், அதே தான் இந்த படத்திலும் என்று போட்ட டியூனையே போட்டுள்ளார்.

சலிப்பு இல்லாமல் செல்லும் திரைக்கதை, குறிப்பாக கிளைமேக்ஸில் லாரன்ஸ் யார் கொலை செய்தார்கள் என்று கண்டுப்பிடிக்கும் காட்சி.

வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள்.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com