An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

காஸி திரை விமர்சனம்

 

 
Quick Stats
 

Plot
0%


 
Acting
0%


 
Directing
0%


 
Cinematography
0%


 
Costume
0%


 
Score
0%


 
Total Score
0%
0/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, இந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை, ராணுவத்தையோ, விமானங்களையே அனுப்பி அதை அழிக்கமுடியாத நிலையில், பாகிஸ்தானிடம் இருந்த அதி சக்தி வாய்ந்த நீர் மூழ்கி கப்பலான ‘காஸி’ யை அனுப்புகிறார்கள். இந்த விஷயத்தை இந்திய உளவுத்துறை அறிந்து, இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உயர் அதிகாரிகளாக இருக்கும் ஓம் பூரிக்கும், நாசருக்கும் தெரியபடுத்துகிறார்கள். அவர்கள் கிழக்கு கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த […]

Posted February 19, 2017 by

 
Full Article
 
 

ghazi-feb16

971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, இந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை, ராணுவத்தையோ, விமானங்களையே அனுப்பி அதை அழிக்கமுடியாத நிலையில், பாகிஸ்தானிடம் இருந்த அதி சக்தி வாய்ந்த நீர் மூழ்கி கப்பலான ‘காஸி’ யை அனுப்புகிறார்கள். இந்த விஷயத்தை இந்திய உளவுத்துறை அறிந்து, இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உயர் அதிகாரிகளாக இருக்கும் ஓம் பூரிக்கும், நாசருக்கும் தெரியபடுத்துகிறார்கள். அவர்கள் கிழக்கு கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த கேப்டன் கே.கே.மேனன் மற்றும் சாதுர்யமான கேப்டன் ராணா, அதுல்குல்கர்னி ஆகியோர் பணிபுரியும் எஸ்21 நீர்மூழ்கி கப்பலை, காஸியை எதிர்க்க அனுப்புகிறார்கள். காஸியை ஒப்பிடும்போதும் பலம் குறைந்த எஸ்-21 எப்படி பாகிஸ்தானின் சதியை முறியடித்து, ‘காஸி’ யை இந்திய கடற்படையினர் எப்படி அழித்தார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

ராணுவத்தையும், ராணுவ போர்க் களங்களையும் மையமாக வைத்து இந்திய சினிமாவில் பல படங்கள் வந்திருந்தாலும், கடற்படையை மையமாக வைத்து ஹாலிவுட் தரத்தில் உருவான முதல் படம் இது தான் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. அதுவும் நீர்மூழ்கி கப்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படமும் இதுதான். படத்தின் நாயகன் ராணா டகுபதி, கப்பற்படை அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் அறிமுக காட்சியில் நடந்துவரும் கம்பீரமே இதற்கு சாட்சி. அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் நமக்கு வெறி ஏற்றியிருக்கிறார். மற்றொரு கேப்டனாக வரும் கே.கே.மேனன் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். எதிரியை பார்த்தாலே அழித்துவிட வேண்டும் என்கிற இவரது ஆக்ரோஷமான நடிப்பு படத்தில் நன்றாகவே எடுபட்டிருக்கிறது. மற்றபடி, கப்பலின் மற்றொரு கேப்டனாக வரும் அதுல் குல்கர்னியும் இவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ராணா பெரிய ஹீரோவாக இருந்தாலும் தனது ஹீரோ என்ற இமேஜை மறைத்துவிட்டு ஒரு கதாபாத்திரமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்திருக்கும் இந்த படத்தில் மசாலாத்தனம் இல்லாமல், எந்த ஒரு விஷயத்தையும் கூடுதாலாக திணிக்காமல், ‘காஸி’ கப்பல் குறித்து வரலாறு என்ன சொல்கிறதோ அதை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு நீர்மூழ்கி கப்பல் எப்படி இருக்கும் என்பதை நம்மை நம்ப வைக்கும் அளவுக்கு, கப்பலில் உள்ள ஒவ்வொரு கருவிகளையும் வடிவமைத்திருப்பதுடன், நீர்மூழ்கி கப்பல் நீருக்குள் மூழ்குவது, மீண்டும் நீருக்கு மேல் எழும்புவது, தண்ணீரில் கப்பலின் செயல்பாடு உள்ளிட்டவைகளை மிகவும் நேர்த்தியாக அனைவரும் நம்பும்படி கையாண்டுள்ளார்கள். அகதியாக வரும் டாப்சியை பார்க்கும்போதே அனைவருக்கும் பரிதாபம் ஏற்படுகிறது. மற்றபடி, எஸ் 21-ல் பணிபுரியும் வீரர்கள், ஓம் பூரி, நாசர் என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து நாம் ஒரு ஆழ்கடல் பயணம் செய்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் சங்கல்ப், தான் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒரு சிறந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஒவ்வொரு சம்பவங்களையும் மிகவும் திரில்லாக நம்மை சீட் நுனியில் உட்கார வைத்திருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு நம்மை நீர்மூழ்கி கப்பலுக்குள் பயணிக்கும் உணர்வை கொடுத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக கையாளப்பட்டிருக்கிறது. கே-யின் பின்னணி இசை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இருக்கிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் தேவையான இசையை மட்டுமே கொடுத்து மிரட்டியிருக்கிறார்.

மொத்தத்தில், ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்த இயக்குநர் சங்கல்ப் ரெட்டிக்கு பெரிய பாராட்டுக்கள்.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com