An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

எய்தவன் திரை விமர்சனம்

 

 
Quick Stats
 

Plot
0%


 
Acting
0%


 
Directing
0%


 
Cinematography
0%


 
Costume
0%


 
Score
0%


 
Total Score
0%
0/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

கலையரசன், அவருடைய தந்தை வேலா ராமமூர்த்தி, அவருடைய தாய், தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். கலையரசன் பணம் என்னும் கருவியை விற்கும் தொழில் செய்து வருகிறார். அவருடன் அந்த தொழிலில் அவருடைய நண்பர் ராஜ்குமாரும் ஈடுபட்டு வருகிறார். கலையரசனின் தங்கை தனது 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படிக்க விருப்பம் தெரிவிக்கிறாள். அவளுடைய மருத்துவ படிப்புக்கு அனுமதி தேடி கலையரசன் அலைகின்றனர். ஒருவழியாக தன்னுடைய தங்கையின் மருத்துவ படிப்புக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் […]

Posted May 12, 2017 by

 
Full Article
 
 

Yeithavan Stills (16)

கலையரசன், அவருடைய தந்தை வேலா ராமமூர்த்தி, அவருடைய தாய், தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். கலையரசன் பணம் என்னும் கருவியை விற்கும் தொழில் செய்து வருகிறார். அவருடன் அந்த தொழிலில் அவருடைய நண்பர் ராஜ்குமாரும் ஈடுபட்டு வருகிறார். கலையரசனின் தங்கை தனது 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படிக்க விருப்பம் தெரிவிக்கிறாள். அவளுடைய மருத்துவ படிப்புக்கு அனுமதி தேடி கலையரசன் அலைகின்றனர். ஒருவழியாக தன்னுடைய தங்கையின் மருத்துவ படிப்புக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு தரகர் மூலமாக ரூ.53 லட்சம் நன்கொடையாக கொடுத்து அந்த கல்லூரியில் தன்னுடைய தங்கைக்கு அனுமது பெறுகிறார் கலையரசன்.

கல்லூரியில் அனுமதி பெற்ற சில நாட்களிலேயே, அந்த கல்லூரிக்கு ‘இந்திய மருத்துவ சங்கத்தின்’ லைசென்ஸ் இல்லை என்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக தான் கொடுத்த நன்கொடை பணத்தை திரும்ப தர கேட்டு, கல்வி நிர்வாகத்திடமும், தரகரிடமும் முறையிடுகிறார் கலையரசன். பிரச்சனை முற்றுகிறது, தரகர் தற்கொலை செய்து கொள்கிறார், தங்கை விபத்தில் இறந்து விடுகிறார். கலையரசன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘இந்திய மருத்துவ சங்கத்தில்’ கல்லூரி மீது புகார் தெரிவிக்கின்றனர். கலையரசன் தன் தங்கை படிப்பிற்காக கொடுத்த பணத்தை கலையரசன் திரும்ப பெறுகிறாரா, மற்ற மாணவர்கள் படிப்பு என்ன ஆகிறது என்பது தான் படத்தின் மீதமுள்ள கதை.

கலையரசன் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்த்டுத்து நடித்து படத்துக்கு படம் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி வருகிறார். சாத்னா டைட்டஸ் போலீஸ் எஸ்.ஐ. யாக மிடுக்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கலையரசனின் அப்பாவாக நடித்திருக்கும் எழுத்தாளர் வேலா ராமமூர்த்தியும் , தேர்ந்த நடிப்பால் அசத்தியிருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆடுகளம் நரேன். சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவின் அருமை படம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. ஐ.ஜே.ஆலனின் படத் தொகுப்பு பிரமாதம். ராக் பிரபுவின் சண்டை காட்சிகளில் கொஞ்சம் யதார்த்தமாகவே சிந்தித்து வைத்திருக்கிறார்கள். இன்று இந்தியா முழுவதும் நடைபெறும் கல்வி கொள்ளையின், குறிப்பாக கேபிடேஷன் பீஸ் என்று சொல்லக்கூடிய நன்கொடை எவ்வாறு ஒரு ரசித்து இல்லாமல் கள்ளத்தனமாக பெறப்படுகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் சக்தி ராஜசேகரன்.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com