An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

எங்க அம்மா ராணி திரை விமர்சனம்

 
எங்க அம்மா ராணி திரை விமர்சனம்
எங்க அம்மா ராணி திரை விமர்சனம்
எங்க அம்மா ராணி திரை விமர்சனம்

 
Quick Stats
 

Plot
0%


 
Acting
0%


 
Directing
0%


 
Cinematography
0%


 
Costume
0%


 
Score
0%


 
Total Score
0%
0/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

மலேசியா வாழ் இந்தியராக சாய்தன்ஷிகா தனது இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். அங்கே தனது கணவன் வேலையின் காரணமாக வெளிநாடு சென்றவர் 3 மாதகாலமாக என்ன ஆனார் என்றே தெரியாமல், அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவரை பற்றி தெரிந்துக் கொள்ள முற்படுகிறார். அலுவலகத்தில் சரியான பதில் கிடைக்காததால் காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். தன் கணவரின் விசா தேதி முடிவுக்கு வரும் நிலையில், ஊருக்கு செல்ல நிர்பந்திக்கப்படுகிறார். ஆனால் தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இருகுடும்பத்தையும் தன் கணவருடன் […]

Posted May 6, 2017 by

 
Full Article
 
 

எங்க அம்மா ராணி திரை விமர்சனம்

மலேசியா வாழ் இந்தியராக சாய்தன்ஷிகா தனது இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். அங்கே தனது கணவன் வேலையின் காரணமாக வெளிநாடு சென்றவர் 3 மாதகாலமாக என்ன ஆனார் என்றே தெரியாமல், அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவரை பற்றி தெரிந்துக் கொள்ள முற்படுகிறார். அலுவலகத்தில் சரியான பதில் கிடைக்காததால் காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். தன் கணவரின் விசா தேதி முடிவுக்கு வரும் நிலையில், ஊருக்கு செல்ல நிர்பந்திக்கப்படுகிறார். ஆனால் தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இருகுடும்பத்தையும் தன் கணவருடன் சேர்ந்துதான் சந்திப்பேன் என்ற போக மறுத்து அங்கேயே ஒரு கடையில் பணியில் அமர்கிறார்.

இந்நிலையில், இரட்டை குழந்தைகளில் ஒரு மகள் திடீரென்று இறந்துவிடுகிறார். அவளுக்கு ஒரு விசித்திரமான நோய் இருப்பது தெரிய வருகிறது. இந்த நோய் அடுத்தக் குழந்தையையும் பாதித்திருக்கிறது என்று மருத்துவர் மூலம் அறிந்து கொண்டு, அந்நோயை குணப்படுத்த குளிர் பிரதேசத்திற்குச் செல்கிறார். அங்கு தன் மகளுக்கு இன்னொரு ஆபத்து நேர்கிறது. நோயிலிருந்தும், ஆபத்திலிருந்தும் தன் மகளை காப்பாற்றுகிறாரா? வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வந்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய்தன்ஷிகா, இப்படத்தில் குழந்தைக் காப்பாற்ற துடிக்கும் ஒரு தாயாக நடித்திருக்கிறார். இப்படத்தையே தாங்கிப் பிடிக்கும் வலுவான கதாபாத்திரத்தை இன்னும் சற்று கவனத்துடன் கையாண்டிருக்கலாம் சாய்தன்ஷிகா. இருந்தாலும், தன் மகளைக் காப்பாற்ற அவர் தவிக்கும் தவிப்பு, ஒரு தாயிடம்தான் இப்படி ஒரு அன்பு இருக்க முடியும் என்று நிரூபிக்கிறது. இறுதியில் தன் மகளைக் காப்பாற்ற வித்தியாசமான மற்றும் துணிகரமான முடிவெடுக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்.பாணி இயக்கியிருக்கிறார். இப்படத்தை சி.முத்துகிருஷ்ணனின் எம்.கே. தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com