Posted August 16, 2017 by editor in News
 
 

900 படங்களுக்கு நடித்த பிரபல நடிகர் உடல்நிலை குறைவு

தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் , குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ” அல்வா வாசு “. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தன்னுடைய வாழ்க்கையில் பயணம் செய்தார். அமைதிப்படை , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம் , சிவாஜி , நடிகர் சத்ய ராஜுடன் பல படங்கள் என இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை , விரைவில் உயிர் பிரிந்து விடும் அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர் என்றார் நடிகர் அல்வா வாசுவின் மனைவி திருமதி. அமுதா வாசுதேவன். இவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.

நகைச்சுவை நடிகர் “அல்வா வாசு” உடல் நலம் முடியாமல் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இனி மேல் சிகிச்சை பலனில்லையென்று அவரை வீட்டிற்கு கொண்டுபோக சொல்லிவிட்டார்கள். இறுதி கட்டத்தில் அவர் இருக்கிறார்.